பாகலுார் மாரியம்மன் கோவில் தேரோட்டம்3 மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம்


பாகலுார் மாரியம்மன் கோவில் தேரோட்டம்3 மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம்


பாகலுார்:பாகலுார், கிராம தேவதை மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில், 3 மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுாரிலுள்ள பழமையான கிராம தேவதை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த, 30ல் துவங்கியது. நேற்று மதியம், 12:10 மணிக்கு வண்ண மலர்களால் அலங்கரித்த தேரில் உற்சவமூர்த்தி அமர வைக்கப்பட்டு தேரோட்டம் துவங்கியது. ஓசூர், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார், முன்னாள் பஞ்., தலைவர்கள் ஜெயராமன், முரளிகுமார் பாபு உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் மாலையில் நிலையை அடைந்தது. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்திருந்த பல ஆயிரம் பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.
பாகலுார் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், தேரோட்டத்திற்கு வந்திருந்த பக்தர் களுக்கு, இஸ்லாமிய மக்களால் தண்ணீர்,
தர்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. விழாவில் இன்றிரவு கிராமதேவதை பல்லக்கு மற்றும் நாளை (ஏப்.4) நள்ளிரவு, 12:00 மணிக்கு திரவுபதி அம்மன் கரகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

Advertisement