வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாலுகா அலுவகம் அருகே, நேற்று, வழக்கறிஞர் சங்கங்களின் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் நவீன வசதிகளுடன்கூடிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கும் பணியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் வழக்கறிஞர்கள் கோஷம் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கண்ணன், திருப்பதி முரளி கிருஷ்ணன் உட்பட பல வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

Advertisement