வனத்திலுள்ள கோவில் பாதைசரி செய்த பா.ஜ.,வினர்
வனத்திலுள்ள கோவில் பாதைசரி செய்த பா.ஜ.,வினர்
தளி:தேன்கனிக்கோட்டை அடுத்த தளி அருகே, சந்திரம் தொட்டி, கீஜனகுப்பம், தேவர்பெட்டா கிராமங்களுக்கு அருகே, வனப்பகுதிக்குள், பழமையான சங்கரேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.
மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படும் இக்கோவிலில் வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கால்நடைகளுக்கு நோய் ஏற்பட்டால் குணமாகும், என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது. அதனால், தளி சுற்று வட்டார கிராம மக்கள் மட்டுமின்றி, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து
செல்கின்றனர். இக்கோவிலுக்கு செல்லும் வழி, வனத்துறை மூலம் மூடப்பட்டதால், பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. அத்துடன் கோவிலும் பல நாட்களாக மூடப்பட்டு பூஜை நடக்காமல் இருந்தது. இதையறிந்த, பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன் மற்றும் கட்சியினர், பொதுமக்களுடன் இணைந்து, வனத்துறை மற்றும் தளி போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பொக்லைன் வாகன உதவியுடன் கோவிலுக்கு செல்லும் பாதையை சரிசெய்தனர். பின்னர் சங்கரேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேக, ஆராதனை செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
மேலும்
-
வக்ப் மசோதாவிற்கு எதிர்ப்பு: நிதிஷ் கட்சியில் இருந்து எம்.பி.,க்கள் ராஜினாமா
-
அணி மாறுகிறாரா சூர்யகுமார்: மும்பை கிரிக்கெட் சங்கம் மறுப்பு
-
இரட்டை இலை சின்ன வழக்கு: விசாரணைக்கு காலக்கெடு கோரி இபிஎஸ் மனு
-
ரபாடா விலகல்: சிக்கலில் குஜராத்
-
ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் கலக்கல்
-
இந்திய அணி 127வது இடம்: 'பிபா' கால்பந்து தரவரிசையில்