பங்குனி உத்திர விழா துவக்கம்

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் பங்குனி உத்திர விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

அவலுார்பேட்டை, சித்தகிரி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலையில் கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

மலை அடிவாரத்தில் நடக்கும் 10 நாள் கந்தபுராண சொற்பொழிவு நேற்று பிற்பகலில் துவங்கியது.

விழாவை முன்னிட்டு 11ம் தேதி காலை 10:00 மணிக்கு புஷ்பரதங்கள் ஊர்வலம், இரவு சுவாமி திருக்கல்யாணம், 12, 13ம் தேதி பிற்பகலில் பட்டி மன்றம், 14ம் தேதி வழக்காடு மன்றம், 13ம் தேதி இரவு 8;00 மணிக்கு இன்னிசை கச்சேரி, 11;00, மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.

ஊராட்சி தலைவர் செல்வம், அறங்காவலர் குழு தலைவர் சுதாசெல்வம், குழு உறுப்பினர்கள் லதாமுரளி, விவேகானந்தன் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Advertisement