அமைப்பு சாரா தொழிலாளர்கள் 'இ-ஷ்ரம்' பதிவு செய்ய சிறப்பு முகாம்

புதுச்சேரி; புதுச்சேரியில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள் இ-ஷ்ரம் திட்டத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்க தொழிலாளர் அதிகாரி செய்திக்குறிப்பு;

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் இந்தியாவில் பணியாற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்களை பதிவு செய்யும் பொருட்டு, தற்போது நடைபாதை தொழிலாளர்கள், நிகழ்ச்சி தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்களை பதிவு செய்து மத்திய அரசின் நலத்திட்டங்களை வழங்க இஷ்ரம் வளைதளத்தில் பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

அதன்படி புதுச்சேரியில் தொழிலாளர்கள் இ-ஷ்ரம் (eSharam) வலைதளத்தில் பதிவு செய்ய புதுச்சேரி அரசின் தொழிலாளர் துறை சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்து உள்ளது.முகாம்கள் நாளை 7ம் தேதி துவங்கி, வரும் 17ம் தேதி வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 வரை நடக்கிறது.

புதுச்சேரியில் இயங்கும் அனைத்து பொது சேவை மையங்கள், சுய்ப்ரேன் வீதியில் இயங்கும் புதுச்சேரி அமைப்புச்சாரா தொழிலாளர் நலச்சங்கம், தட்டாஞ்சாவடி புதுச்சேரி கட்டட மற்றும் இதர கட்டுமான தொழிலாளர் நல வாரியம்,மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் தொழில் பயிற்சி நிறுவனம், வம்பாகீரப்பாளையம் அரசு பெண்கள் தொழில் பயிற்சி நிறுவனம், வில்லியனுார்அரசு தொழில் பயிற்சி நிறுவனம், பாகூர் அரசு தொழில் பயிற்சி நிறுவனம், நெட்டப்பாக்கம் அரசு தொழில் பயிற்சி நிறுவனம் ஆகிவற்றில் நடக்கும் முகாம்களில் பதிவு செய்யலாம்.

இத்திட்டத்தில் 18 வயது முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும். பதிவு செய்ய ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம்,ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை பதிவுசெய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு 18005998050 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

Advertisement