பூமி பூஜை

திருப்பரங்குன்றம்: மாநகராட்சி மேற்கு மண்டலம் திருப்பரங்குன்றம் அலுவலகத்தில் பூமி பூஜை, கல்வெட்டு திறப்பு விழா நடந்தது.

மண்டல தலைவர் சுவிதா தலைமை வகித்தார். மேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்தார். துணை மேயர் நாகராஜன், உதவி கமிஷனர் பார்த்தசாரதி, கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், இந்திராகாந்தி, சிவசக்தி கலந்து கொண்டனர். மண்டல அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடக்கும் இடத்தில் ரூ. 12 லட்சத்தில் கூரை அமைக்க பூமி பூஜை நடந்தது.

Advertisement