நுால் வெளியீட்டு விழா

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி தமிழ் உயராய்வு மையம் நிறைவு விழா மற்றும் நுால் வெளியீட்டு விழா நடந்தது.

முதல்வர் ராம சுப்பையா தலைமை வகித்தார். தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, உப தலைவர் ஜெயராம், பொருளாளர் ஆழ்வார்சாமி, இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். உயராய்வு மைய துறை தலைவர் காயத்ரிதேவி வரவேற்றார். பேராசிரியர் தேவிபூமா அறிமுக உரையாற்றினார். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமித்துரை பேசினார். பேராசிரியர்கள் மல்லிகா, திருஞானசம்பந்தம் தொகுத்துரைத்தனர். மாணவர்கள் எழுதிய அறிவுக்கு வெளிச்சம், வாசிப்பு திருவிழா ஆகிய நுால்கள் வெளியிடப்பட்டன. பேராசிரியர் முனியசாமி நன்றி கூறினார். துறை தலைவர்கள் பரிமளா, சக்திவேல், சுரேஷ்பாபு கலந்து கொண்டனர்.

Advertisement