விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் பெண்களை தற்காத்துக் கொள்ளும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். முதல்வர் பொன்னி முன்னிலை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஷ்வரன் அறிமுக உரையாற்றினார். திருப்பரங்குன்றம் மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, எஸ்.ஐ. வளர்மதி, ஏட்டு சுந்தரி பேசினர். காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் ஆபத்து காலங்களில் போலீசாரின் உதவியை நாடும் முறைகள் குறித்து விளக்கினர். பேராசிரியர்கள் விஜயலட்சுமி, மஞ்சுளா, மேகலா, உமா மகேஸ்வரி, ரேணுகாதேவி, ரோகினி, கார்த்திகாதேவி ஒருங்கிணைத்தனர்.

Advertisement