மதுக்கடை அமைக்க எதிர்ப்பு

திருப்பரங்குன்றம்: கைத்தறி நகரில் அரசு மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று ரிங் ரோட்டில் மக்கள் மறியல் செய்ய முயன்றனர். போலீசார் சமரசத்தை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

அப்பகுதியினர் கூறியதாவது: கைத்தறி நகரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளனர். மதுக்கடை ஆரம்பிக்க பணிகள் நடக்கின்றன. இந்த ரோட்டை மாணவியர் பயன்படுத்துகின்றனர். அருகில் பள்ளி உள்ளது. மதுக்கடை அமைந்தால் மக்கள், மாணவர்கள் சிரமப்படுவர் என்றனர்.

Advertisement