கேலோ இந்தியா பாரா கேம்ஸ்

மதுரை: டில்லியில் 'கேலோ இந்தியா பாரா கேம்ஸ்' போட்டி நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தமிழகத்தில் இருந்து பாரா வீரர்களுக்கான தடகளம், துாக்குதல், டேபிள் டென்னிஸ், இறகுபந்து, துப்பாக்கி சுடுதல், வில்வித்தை போட்டிகளில் 190 பேர் பங்கேற்றனர். 28 தங்கம், 19 வெள்ளி, 25 வெண்கலப் பதக்கங்களை தமிழக அணி தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்றது.
மதுரை வீரர் வீராங்கனைகள் 9 பதக்கங்களை வென்றனர். பிரிவு 35 குண்டு எறிதலில் பிரசாந்த் தங்கம் வென்றார். பிரிவு 53 குண்டு எறிதலில் முனியசாமி வெள்ளி, பிரிவு 46 குண்டு எறிதலில் ரூபா வெண்கலம், பிரிவு 41 குண்டு எறிதலில் மனோஜ் வெண்கலம், (பிரிவு 46) 200 மீட்டர் ஓட்டத்தில் அமுலிய ஈஸ்வரி வெண்கலம், பிரிவு 40 வட்டு எறிதலில் பாண்டி மீனா வெண்கலம், 55 கிலோ எடை பிரிவில் ஜாஸ்மின் மைக்கிலின் அமலோற்பவம் வெள்ளி வென்றனர்.
வீரர்கள், பயிற்சியாளர் ரஞ்சித்குமாரை ஆணைய மதுரை மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, விடுதி மேலாளர் முருகன் பாராட்டினர். பயிற்சியாளர்கள் குமரேசன், பாலாஜி, தீபா கலந்து கொண்டனர்.
மேலும்
-
சஷ்டியையொட்டி மண் சோறுசாப்பிட்ட பக்தர்கள்
-
நாளை மின் நுகர்வோர்குறைதீர் கூட்டம்
-
நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர்தேர்வு: விண்ணப்பிக்க அழைப்பு
-
அரசு கலை அறிவியல் கல்லுாரியில்போதை பொருட்கள் விழிப்புணர்வு
-
பிளஸ் 2 படிக்கும் எஸ்.சி., எஸ்.டி.,மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி
-
பாதுகாப்பு இல்லாத கிணறுகம்பி வலை அமைக்கப்படுமா