சங்கங்களுக்கு மானிய தொகை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம், கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு 2023-- 24-ம் ஆண்டிற்கான இணை மானியத்தொகையை பயனாளிகளுக்கு வழங்க செயற்குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட 134 பேருக்கு ரூ.20 லட்சம், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட 111 பேருக்கு ரூ.20 லட்சம் என ரூ.40 லட்சம் 245 பேருக்கு வழங்கப்பட்டது. கவுரவ செயலாளர் ஆல்பர்ட் பெர்னான்டோ, முஸ்லிம் சங்க கவுரவ செயலாளர் பீர்முகமது கலந்து கொண்டனர்.

Advertisement