சதுரங்க வீரர்களுக்கு அழைப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சதுரங்க கழகம் மாவட்ட ஓபன் சதுரங்கப்போட்டியை திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்துடன் இணைந்து நடத்த உள்ளது. மாவட்டத்தை சேர்ந்த இருபாலரும் பங்குபெறலாம்.
முதலிடம் பெறுபவருக்கு மாவட்ட சாம்பியன் சான்றிதழுடன் ரொக்கப் பரிசு , பரிசு கோப்பை , முதல் 10 இடம் பெறுவோருக்கு ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது.
முதல் 4 இடம்பெறுபவர்கள் ஜூனில் விருதுநகரில் நடக்கும் மாநில ஓபன் சதுரங்க போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் சார்பில் விளையாட அனுப்பி வைக்கப்படுவர்.
விரும்புவோர் பெயரை இன்று மாலைக்குள் டாக்டர் கருணாகரனிடம் 98421 87178 ல் எஸ்.எம்.எஸ்., அனுப்பி பதிவு செய்யலாம்.
தாமதமாக வருபவர்கள் முதல் சுற்றில் விளையாட இயலாது. 2ம் சுற்றில் இருந்தே விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட சதுரங்க கழகத் தலைவர் சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.