சாரல் மழையால் நீடித்த மின் தடை

கன்னிவாடி: ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி, செம்பட்டி பகுதியில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரித்து வருகிறது.

இரு நாட்களாக மாலை நேரங்களில் மேகமூட்டத்துடன் பலத்த காற்று வீசுகிறது. நேற்று மாலை செம்பட்டி, பெருமாள்கோயில்பட்டி, பாறைப்பட்டி பகுதியில் சாரல் மழை பெய்தது. தருமத்துப்பட்டி, கன்னிவாடி, மாங்கரை பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. வட்டப்பாறை, கோனுார், கரிசல்பட்டி, கசவனம்பட்டி, அலவாச்சிபட்டி, குட்டத்துப்பட்டி உள்பட பல கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. சில இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்வினியோகம் இல்லை.

Advertisement