ராஜ மாரியம்மன் கோயிலில்  பூக்குழி விழா கொடியேற்றம் பூக்குழி விழா கொடியேற்றம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சமஸ்தானத்தை சேர்ந்த அல்லிக் கண்மாய் ராஜமாரியம்மன் கோயிலில் ஏப்.,2 முதல் ஏப்.12 வரை பங்குனி பவுர்ணமி பூக்குழி திருவிழா நடக்கிறது.

விழாவை முன்னிட்டு நேற்று மூலவர் மாரியம்மன், உற்ஸவருக்கு பால், பழங்கள், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகத்தில் பூஜைகள் செய்து, யாகபூஜையுடன் கொடிமரத்தில் அம்மன்படம் வரைந்த கொடியை ஏற்றினர்.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.12ல் பங்குனி பவுர்ணமி அன்று பூவளர்த்து இரவு 10:00 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Advertisement