சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் 

சிவகங்கை: பெரம்பலுார் கலெக்டரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து சிவகங்கையில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் மாரி, துணை தலைவர் பாண்டி, இணை செயலாளர் பயாஸ் அகமது, சின்னப்பன் பங்கேற்றனர். சிவகங்கையில் வட்ட கிளை தலைவர் முத்தையா, திருப்புவனத்தில் தலைவர் கருப்புராஜா, சாக்கோட்டையில் தலைவர் ஜாகிர் உசேன், திருப்புத்துாரில் மகளிர் அமைப்பாளர் லதா, மானாமதுரையில் தலைவர் கோபால், தேவகோட்டையில் செயலாளர் கண்ணன், கண்ணங்குடியில் செயலாளர் ராமநாதன், சிங்கம்புணரியில் கிளை தலைவர் குமரேசன் தலைமை வகித்தனர்.

Advertisement