கோடை விடுமுறைக்கு இரு சிறப்பு ரயில்கள்

கோவை; கோடை விடுமுறை கூட்ட நெரிசலை தவிர்க்க, போத்தனுார் வழியாக ஈரோட்டில் இருந்து, ராஜஸ்தான் பார்மருக்கும்,கோவையிலிருந்து ராஜஸ்தான் பாகத் கி கோதிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு - பார்மர் (06097) சிறப்பு வாராந்திர ரயில், வரும் 8 முதல், ஜூன், 10ம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் காலை, 6:20 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு, மூன்றாம் அதிகாலை 4:30 மணிக்கு பார்மர் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், பார்மர் - ஈரோடு(06098) சிறப்பு வாராந்திர ரயில், வரும் 11 முதல், ஜூன் 13ம் தேதி வரை, வெள்ளிக்கிழமைகளில் பார்மரில் இருந்து, இரவு 10:50 மணிக்கு புறப்பட்டு, மூன்றாம் நாள் இரவு, 8:15 மணிக்கு ஈரோடு வந்தடையும்.

ரயிலில், ஏ.சி., மூன்றடுக்கு, 14, துாங்கும் வசதி, 4, பொது இரண்டாம் வகுப்பு உள்ளிட்ட பெட்டிகள் இருக்கும்.

இந்த ரயில் திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, சொரனுார், திரூர், கோழிக்கோடு, கண்ணுார், காசர்கோடு உள்ளிட்ட, ரயில்வே ஸ்டேஷன்கள் வழியாக செல்லும்.

கோவை - பாகத் கி கோதி இடையே சிறப்பு ரயில்



கோவை - பாகத் கி கோதி(06181) இடையேயான சிறப்பு வாராந்திர ரயில், வரும், 10 முதல், ஜூலை, 3 ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் அதிகாலை 2:30 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமை காலை 11:30 மணிக்கு பாகத் கி கோதி சென்றடையும்.

மறுமார்க்கத்தில், பாகத் கி கோதி - கோவை இடையேயான சிறப்பு வாராந்திர ரயில் வரும், 13 முதல், ஜூலை 6 ம் தேதி வரை ஞாயிற்று கிழமைகளில் இரவு, 11:00 மணிக்கு புறப்பட்டு, புதன் கிழமை, காலை 9:30 மணிக்கு கோவை வந்தடையும்.

Advertisement