மருதமலை கும்பாபிஷேக விழா  பலத்த போலீஸ் பாதுகாப்பு 

கோவை; மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, பாதுகாப்பு பணியில் 1000 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நாளை (ஏப்., 4) நடக்கிறது. விழாவுக்கு சுமார் 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவை முன்னிட்டு, பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து, விழாவுக்கு வரும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பொது மக்களின் பாதுகாப்புக்காகவும், வெடிகுண்டு நிபுணர்கள் உட்பட, 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement