வியாபாரி தற்கொலை

தேவகோட்டை: தேவகோட்டை சரஸ்வதி வாசகசாலை ரோட்டில் வாடகை வீட்டில் வசிப்பவர் மாணிக்கம் 67., குடும்பத்துடன் வசித்து வந்த மாணிக்கம் தினசரி மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வந்தார்.

தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் கடன் தொல்லை உருவானது. வேதனையில் இருந்த மாணிக்கம் நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி வசந்தி 62., போலீசில் புகார் செய்தார்.

Advertisement