பிரதமர் மோடி வருகை ரயில்வே ஸ்டேஷன் பராமரிப்பு
மானாமதுரை: ராமேஸ்வரத்தில் பாம்பன் பால திறப்பு விழாவிற்காக பிரதமர் மோடி வருகை தருவதை முன்னிட்டு ரயில்வே ஸ்டேஷன்கள் புதுப்பிக்கும் பணியும், ரயில்வே பாதைகளில் ஆய்வு செய்யும் பணியும் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன்,ராமேஸ்வரம் இடையே கடல் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாம்பன் பாலத்தின் திறப்பு விழா ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். கடந்த சில நாட்களாக மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் ரயில் பாதைகளில் விபத்து ஏற்பட்டால் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும், விபத்திற்கான காரணம் கண்டறியவும், தனி ரயில் பாதை பராமரிப்பு மற்றும் மீட்பு பணி ரயிலை கொண்டு நேற்று மதுரையிலிருந்து மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் வரையிலும், விருதுநகர் ரயில்வே பாதைகளிலும் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் சேதமடைந்த கட்டடங்கள் மற்றும் பிளாட்பாரங்களை சரி செய்து வர்ணம் பூசும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்
-
விபத்தால் பாதித்த பெண்ணுக்கு இழப்பீடு
-
100 நாள் வேலை திட்டத்தில் 1.5 கோடி மரக்கன்றுகள் நட திட்டம்
-
நெடுஞ்சாலையில் தலைதொங்கிய 'சிசிடிவி' கேமரா சீரமைக்க வலியுறுத்தல்
-
சில வரிகள்...
-
போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் மூன்று ஆண்டுகளில் 50,072 பேர் கைது கூடுதல் டி.ஜி.பி., அமல்ராஜ் தகவல்
-
நசரத்பேட்டையில் நடைபாதைக்கு இரும்பு கிரில் தடுப்பு அமைப்பு