கடையில் மது விற்ற இருவர் கைது

இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது இதையடுத்து கோவில் வளாகத்தை சுற்றி ஏராளமான கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

ஒரு கடையில் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக இளையான்குடி போலீசாருக்கு வந்த தகவலையடுத்து போலீசார் சோதனை நடத்திய போது மது விற்ற புவனேஷ் கிருஷ்ணா, கிருஷ்ணகுமார் ஆகிய 2பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 53 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement