கல்வியின் தரத்தில் அர்ப்பணிப்பு: கமாண்டிங் அலுவலர் புகழாரம்

கோவை,; கோவை நேவி சில்ட்ரன் பள்ளியில், கூடுதல் வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டடத்தை, ஐ.என்.எஸ்., அக்ரானியின் கமாண்டிங் அலுவலரும், பள்ளியின் தலைவருமான மன்மோகன் சிங் திறந்துவைத்தார்.

அப்போது அவர் பேசுகையில்,''இந்திய கடற்படையானது, தரமான கல்வி வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இப்பள்ளியில் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு, வசதிகள் மாணவர்களிடம் கற்றல் அனுபவத்தையும், கல்வி தரத்தையும் மேம்படுத்தும். கல்வியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதில், இது மைல்கல்லாக விளங்கும்,'' என்றார்.பள்ளி தலைமையாசிரியர் மனோஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement