பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி விழா கொடியேற்றம்

தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே கொம்மந்தாபுரம் பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

நேற்று காலை 9:30க்கு கொடியேற்றப்பட்டு திருநீர், மஞ்சள், பன்னீர், பால், தேன் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. கொடி மரத்திற்கு அலங்காரம் முடிந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டு நிகழ்ச்சி நடந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

திருவிழா நாட்களில் தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். சிறப்பு நிகழ்வான ஏப்.8ல் பூக்குழி திருவிழா நடைபெறும்.

Advertisement