ஏப்.15க்குள் நில உடமை விவரத்தை பதிவிடுங்கள்

விருதுநகர்: வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் நில உடமை விவரங்களை விவசாயிகள் ஏப். 15 க்குள் இலவசமாக பதிவிட அறிவுறுத்தப்படுகின்றனர்.

மாவட்டத்தில் வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடமை விவரங்கள் வேளாண், தோட்டக்கலை துறை, வேளாண் வணிகம், விற்பனைத் துறை, விதைச் சான்றளிப்புத் துறை அலுவலர்கள், இல்லம் தேடி கல்வி திட்டத் தன்னார்வலர்கள், பொது சேவை மையம் மூலம் இலவசமாக பதிவு செய்யப்படுகிறது.

மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 16 விவசாயிகளில், 55 ஆயிரத்து 70 பேரின் விவரங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசின் வேளாண் சார்ந்த திட்டங்கள், பிரதமரின் கவுரவ ஊக்கதொகை, பயிர் காப்பீட்டு திட்டங்கள் இப்பதிவுகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

எனவே விவசாயிகள், ஆதார் எண், அதனுடன் இணைக்கப்பட்ட அலைபேசி, கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட பட்டா நகலுடன் மேற்கண்ட அலுவலகங்கள், தன்னார்வலர்கள், பொது சேவை மையத்தை அணுகி ஏப்., 15க்குள் நில உடமை விவரங்களை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட வேளாண், தோட்டக்கலைத் துறைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement