முத்து மாரியம்மன் கோயில் பொங்கல் விழா கொடியேற்றம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

முன்னதாக நாடார்கள்உறவின்முறை அலுவலகத்தில் இருந்து மேள தாளங்களுடன் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.

15 நாட்கள் நடைபெறும் விழாவில் அம்மன் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 8ம் நாள் விழாவாக கோயில் முன்பு பொங்கல் வைத்து பெண்கள் வழிபடுவர். 9ம் நாளில் பக்தர்கள் விரதம் இருந்து அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்துவர். மறுநாள் அதிகாலையில் பூக்குழி நடக்கும்.

ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமையில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Advertisement