10ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம்; தாய்க்கு பதில் தேர்வெழுதிய மகள்

நாகப்பட்டினம்; நாகையில், 10ம் வகுப்பு தேர்வில், தாய்க்கு பதிலாக, ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மகளை, தேர்வு கண்காணிப்பாளர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த 28ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இத்தேர்வு நாகை மாவட்டத்தில் 42 மையங்களில் நடக்கிறது. பள்ளி மாணவர்களுடன், தனித்தேர்வர்களும் இத்தேர்வை எழுதி வருகின்றனர்.
நேற்று நாகை, நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில், ஆங்கில பாடத்திற்கான தனித்தேர்வு துவங்கியது. தேர்வு அறை கண்காணிப்பாளர், வினாத்தாள் மற்றும் தேர்வு எழுதுவதற்கான தாள்களை, தேர்வு எழுதுபவர்களிடம் கொடுத்து, கையெழுத்து வாங்கினார்.
அப்போது ஒரு மாணவி முகம் கவசம் அணிந்து இருந்ததால், சந்தேகமடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர் முக கவசத்தை அகற்றும்படி கூறியுள்ளார்.
நுழைவு சீட்டை சோதனை செய்ததில், வருகை பதிவு குறிப்பேட்டில் வேறு நபர் புகைப்படம் இருந்தது தெரியவந்தது. அதையடுத்து, மாணவியை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், வெளிப்பாளையத்தை சேர்ந்த செல்வாம்பிகை,25, என்பதும் தனது தாய் சுகந்திக்காக ஆள் மாறாட்டம் செய்து, தேர்வு எழுத வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அப்பெண்ணை, வெளிப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.










மேலும்
-
பிரதமர் மோடி வருகையால் பாதுகாப்பு கருதி இன்று முதல் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை
-
ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவை நாகை அருகே அசத்துகிறது அரசு பள்ளி
-
தம்பி இறந்த அதிர்ச்சியில் அக்காவும் இறப்பு
-
வக்ப் திருத்த மசோதா: ராஜ்யசபாவில் 128 எம்.பி.க்கள் ஆதரவுடன் நிறைவேற்றம்
-
இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்காக 14 ஆண்டுகளாக காத்திருக்கும் எஸ்.ஐ.,க்கள்
-
வேளாண் கூட்டுறவு சங்கத்தில் மோசடி: செயலாளர் 'சஸ்பெண்ட்'