தம்பி இறந்த அதிர்ச்சியில் அக்காவும் இறப்பு

சிங்கம்புணரி:சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மூச்சு திணறலால் இறந்த தம்பியை பார்த்து அழுதபோது மாரடைப்பு ஏற்பட்டதில் அவரது அக்காவும் உயிரிழந்தார்.

சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை சாமியாடிகளம் கிருஷ்ணன் மகன் மருதன் 49. வழக்கறிஞரிடம் குமாஸ்தாவாக பணிபுரிந்தார். ஏப். 2 இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டத்தில், மருதன் உயிரிழந்தார். நாடார்வேங்கைபட்டியில் வசிக்கும் அவரது அக்கா புஷ்பம் 52, தம்பியின் இறப்பிற்கு வந்திருந்தார்.

தம்பியின் உடலை பார்த்து அழுதபோது, அவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்தார். மருதனுடன் இரு அண்ணன், 2 அக்கா உடன் பிறந்தவர்கள். மூத்த அக்கா தான் புஷ்பம். சிறுவயதில் தந்தையை இழந்த மருதனை, அக்காதான் வளர்த்துள்ளார். பாசத்தோடு வளர்த்த தம்பியின் இறப்பை தாங்கி கொள்ள முடியாத நிலையில் உயிரிழந்தார். இருவரது உடலும் அவரவர் வசித்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement