மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் காவலர் மீது ஆந்திர பக்தர்கள் தாக்குதல்
மதுரை,: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரிசையை ஒழுங்குபடுத்திய காவலரான ஓய்வுபெற்ற ராணுவவீரரை ஆந்திர பக்தர்கள் தாக்கியதில் மூக்கில் காயம்பட்டு ரத்தம் வழிந்தது.
இக்கோயிலில் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க தனியார் செக்யூரிட்டி ஆட்கள், ஓய்வுபெற்ற ராணுவீரர்கள் 'கோயில் காவலர்கள்' என்ற பெயரில் பணிபுரிகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு 7:30 மணிக்கு அம்மன் சன்னதிக்கு செல்ல ஆடி வீதியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது ஆந்திர பக்தர் ஒருவர் திடீரென தடுப்பு மீது ஏறி வரிசைக்குள் புகுந்தார்.
இதை கவனித்த கோயில் காவலரும், ஓய்வுபெற்ற ராணுவவீரருமான சுந்தரபாண்டி கண்டித்தார். அவருக்கும், பக்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வரிசையில் நின்றிருந்த ஆந்திரா பக்தர்கள் சிலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சுந்தரபாண்டியை தாக்கியதில் அவரது மூக்கில் காயம்பட்டு ரத்தம் வழிந்தது.
உடனடியாக அவரை அங்கிருந்த சக ஊழியர்கள் முதலுதவி மையத்திற்கு அழைத்துச்சென்றனர். சம்பந்தப்பட்ட ஆந்திர பக்தர்களிடம் போலீசார் விசாரித்தனர். 'வரிசையில் நின்றிருந்தவர்கள் தன்னுடன் வந்தவர்கள். அவர்களுடன் சேர்ந்து செல்லவே தடுப்பை தாண்டி குதித்தேன்' என பக்தர் தெரிவித்தார்.
பின்னர் அவரும், அவர்களுடன் வந்தவர்களும் சுந்தரபாண்டியனிடம் மன்னிப்பு கேட்டனர். அதை அவரும் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து போலீசார் அறிவுரைகூறி அனுப்பி வைத்தனர்.

மேலும்
-
பிரதமர் மோடி வருகையால் பாதுகாப்பு கருதி இன்று முதல் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை
-
ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவை நாகை அருகே அசத்துகிறது அரசு பள்ளி
-
தம்பி இறந்த அதிர்ச்சியில் அக்காவும் இறப்பு
-
வக்ப் திருத்த மசோதா: ராஜ்யசபாவில் 128 எம்.பி.க்கள் ஆதரவுடன் நிறைவேற்றம்
-
இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்காக 14 ஆண்டுகளாக காத்திருக்கும் எஸ்.ஐ.,க்கள்
-
வேளாண் கூட்டுறவு சங்கத்தில் மோசடி: செயலாளர் 'சஸ்பெண்ட்'