'சொத்து வரி குறைப்பு உரிய நேரத்தில் அறிவிப்பு'

திருப்பூர்; ''சொத்து வரி குறைப்பு தொடர்பாக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது; உரிய நேரத்தில் நல்ல அறிவிப்பு வெளியாகும்'' என்று திருப்பூர் மேயர் தினேஷ்குமார் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
கோவை மற்றும் திருப்பூர் மாநகராட்சியில், மண்டல அடிப்படையிலான வரி விதிப்பில் மட்டுமே வேறுபாடு உள்ளது. குப்பை வரி குறைப்பு, அபராத வரி விதிப்பு குறித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரே உறுதி அளித்துள்ளார்.பாலிதீன் பயன்பாடு குறித்து தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. உற்பத்தி மட்டத்தில் இது தடுக்கப்பட வேண்டும். மாநகராட்சி நிர்வாகம், சுகாதார மையங்களில், அனைத்து காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.தினசரி மார்க்கெட், மாநாட்டு அரங்கம் ஆகியன விரைவில் டெண்டர் விட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். நிர்வாகரீதியான சில நடவடிக்கைகள் காரணமாக இது சற்று தாமதமானது.
நிதி ஒதுக்கீட்டில்பாரபட்சம் இல்லை
மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் எந்த வேறுபாடுமின்றி நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எந்த பாரபட்சமும் காட்டுவதில்லை.சாயக்கழிவுகள் பிரச்னையில் மாநகராட்சியின் கவனத்துக்கு வரும் தகவல்கள், மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், இங்கு மட்டும்தான், மாநகராட்சி சார்பில், கழிவு நீர் சுத்திகரிப்பு செய்து ஆற்றில் விடும் திட்டம் உள்ளது.மாநகராட்சி பட்ஜெட் குறித்து உரிய புரிதல் இன்றி பா.ஜ.,வினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பா.ஜ.,வுக்காக இல்லாமல் பொதுமக்களுக்காக அவற்றுக்கு உரிய விளக்கம் தர வேண்டியுள்ளது.திட்டப் பணிகளில் திட்ட மதிப்பீடு, திருத்திய மதிப்பீடு என்பது வழக்கமாக மேற்கொள்ளப்படுவதுதான். ஜி.எஸ்.டி., உயர்வு இதில் ஒரு காரணம். டிபாசிட் தொகை என்பது, ஒப்பந்ததாரர்களிடம் பிடித்தம் செய்து வைத்து விடுவிக்கப்படும் தொகை. அதை பணி ஒப்பந்ததாரர்களுக்கு திரும்ப வழங்கியுள்ளோம். வேறு செலவுக்கு அதைப் பயன்படுத்தவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: மும்பை அணிக்கு 204 ரன்கள் இலக்கு
-
டிரம்ப் வரி விதிப்பால் கோடிகளை இழந்த கோடீஸ்வரர்கள்
-
ஆடிட்டரிடம் ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்: போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
-
முட்டை கேட்ட பள்ளிச் சிறுவன் மீது துடைப்பத்தால் தாக்குதல்; சத்துணவு பணியாளர்கள் கைது
-
பார்லி நிலைக்குழு அறிவுறுத்தலை கேட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்குமா: கேட்கிறார் சிதம்பரம்
-
சக அதிகாரியிடம் 30,000 ரூபாய் லஞ்சம்: முத்திரை ஆய்வாளர் கைது!