மத்திய, மாநில வரி திரும்ப பெறும் திட்டம் நீட்டிப்பது அவசியம்: ஏற்றுமதியாளர்கள்

திருப்பூர்; வர்த்தக போட்டிகள் அதிகரித்து வரும்நிலையில், ஏற்றுமதியாளர்களுக்கு வரியை திருப்பி அளிக்கும், ஆர்.ஒ.எஸ்.சி.டி.எல்., திட்டத்தை நீட்டிப்பது குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், மத்திய அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட உள்ளது.
ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் செலுத்தும் மத்திய மற்றும் மாநில வரி, ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., (ரிபேட் ஆப் ஸ்டேட் அண்ட் சென்ட்ரல் டேக்ஸ் அண்ட் லெவிஸ்) என்ற பெயரில், ஏற்றுமதியாளர்களுக்கே திரும்ப அளிக்கப்படுகிறது.
உலகளாவிய சந்தையில் நாளுக்குநாள் போட்டி அதிகரித்து வருகிறது. போட்டி களம் சமநிலையில் இருக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., திட்டத்தை மத்திய அரசு நீட்டிக்கவேண்டும் என்கிற கோரிக்கை, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அரசுக்கு விரிவான அறிக்கை தயாரித்து அனுப்புவது தொடர்பான ஆலோசனை கூட்டம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நடந்தது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) துணைத்தலைவர் சக்திவேல் பேசியதாவது:
ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகளை குறைக்க வேண்டும் என, உலக வர்த்தக மையம், தொடர்ந்து இந்தியாவை வலியுறுத்திவருகிறது. ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், மற்ற நாடுகளுடனான வர்த்தக போட்டிகளை எதிர்கொள்ளவும், மத்திய அரசு, பல வழிகளில் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஆடை உற்பத்தியில் பல்வேறு நிலைகளில் ஏற்றுமதியாளர்களுக்கு விதிக்கப்படும் மத்திய, மாநில வரிகள், குறிப்பாக போக்குவரத்து, எரிபொருள், பேக்கேஜிட் உள்ளிட்ட மறைமுக வரிகள், ஏற்றுமதியாளர்களுக்கு திரும்ப அளிக்கப்பட்டு வருகிறது. ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., திட்டத்தை தொடர்ந்து நீட்டிக்கச் செய்யவேண்டும். இதுகுறித்து உரிய ஆவணங்களை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, சக்திவேல் கூறினார்.
ஐ.சி.சி.எச்., ஆலோசகர் சோப்ரா, ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., திட்டம் குறித்து அரசுக்கு சமர்ப்பிக்கவேண்டிய தரவுகள் குறித்து விளக்கி பேசினார்.
ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், இணைச்செயலாளர் குமார்துரைசாமி மற்றும் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களின் மேலாளர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
டிரம்ப் வரி விதிப்பால் கோடிகளை இழந்த கோடீஸ்வரர்கள்
-
ஆடிட்டரிடம் ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்: போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
-
முட்டை கேட்ட பள்ளிச் சிறுவன் மீது துடைப்பத்தால் தாக்குதல்; சத்துணவு பணியாளர்கள் கைது
-
பார்லி நிலைக்குழு அறிவுறுத்தலை கேட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்குமா: கேட்கிறார் சிதம்பரம்
-
சக அதிகாரியிடம் 30,000 ரூபாய் லஞ்சம்: முத்திரை ஆய்வாளர் கைது!
-
வக்ப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது காங்.,