பனியன் நிறுவன பஸ் கவிழ்ந்து 15 பணியாளர்கள் காயம்

பொங்கலுார்; பொங்கலுார் அருகே பனியன் நிறுவன பஸ் கவிழ்ந்ததில், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

திருப்பூரைச் சேர்ந்த ஒரு பனியன் நிறுவனத்தில் இருந்து பஸ் ஒன்று, நேற்று காலை பணியாளர்களை ஏற்றிக்கொண்டு பொங்கலுார், பல்லவராயன்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஸ் ரோட்டில் கவிழ்ந்தது.

தாராபுரத்தை சேர்ந்த மணிகண்டன், 28 பஸ்சை இயக்கினார். தாராபுரம் அன்னம்மாள், 47, சந்திரலேகா, 25, சந்தியா, 24, காங்கயம் பரமேஸ்வரி, 45, பொங்கலுார், செங்காட்டுப்பாளையம் பெரியம்மாள், 40 ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

டிரைவர் மணிகண்டன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும், 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement