பென்சன் விதிமுறைக்கு எதிர்ப்பு; ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்  

திருப்பூர்; திருப்பூர் தலைமை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றப்பட்ட பென்சன் விதிமுறைகளைத் திருத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சவுந்திரபாண்டியன் தலைமை வகித்தார்.

பி.எஸ்.என்.எல்., தபால், போக்குவரத்து, ரயில்வே டி.ஆர்.யூ., மின்சாரம் உள்ளிட்ட ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். ராஜேந்திரன், நாகராஜன், முகமது ஜாபர், நிசார் அகமது உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

Advertisement