உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலுார்; உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, அறிவுத்திறன் மேம்படுத்தும் விளையாட்டு உபகரணங்களை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.

கடலுார் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில், உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தையொட்டி மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பலுான்கள் பறக்கவிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், மன இறுக்கம் கொண்ட மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பெற்றோர்களிடையே ஆட்டிசம் நோய் குறித்தும், ஆட்டிசம் குழந்தைகளுக்கான பயிற்சி முறைகள், குழந்தைகள் வளர்ப்பு போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். குழந்தைகள் அறிவுத்திறன் மேம்படுத்தும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர் பாபு மற்றும் கடலுார் குளோபல் ஆட்டிசம் மையம், பண்ருட்டி ஆரம்பகால ஆட்டிசம் பயிற்சி மையம் குழந்தைகள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement