மாவட்ட கிரிக்கெட்; என்.ஐ.ஏ., கல்வி நிறுவன அணி வெற்றி
கோவை; மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் என்.ஐ.ஏ., கல்வி நிறுவன கிரிக்கெட் கிளப் அணியும், கே.எம்.பி., கிரிக்கெட் அணியும் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மூன்றாவது டிவிஷன் 'என்.தாமோதரன் வெல்பேர் டிரஸ்ட் டிராபி' போட்டிகள் பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., 'சி' மைதானத்தில் நடந்துவருகிறது. ரெயின்போ கே.எம்.பி., கிரிக்கெட் கிளப் அணியும், கே.எம்.பி., கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ரெயின்போ கே.எம்.பி., அணி, 49 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 181 ரன்கள் எடுத்தது. வீரர் முரளிதரன், 41 ரன்களும், அருண்பாண்டியன், 44 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர் பிரபாகரன் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய கே.எம்.பி., கிரிக்கெட் கிளப் அணி, 36.5 ஓவரில் எட்டு விக்கெட்களை இழந்து, 183 ரன்கள் எடுத்தது. வீரர் விவேக் பீட்டர், 46 ரன்களும், தர்மதுரை, 80 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர் அய்யப்பன் நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார். அடுத்து, என்.ஐ.ஏ., கல்வி நிறுவன கிரிக்கெட் கிளப் அணியும், கொங்கு கிரிக்கெட் கிளப் அணியும் விளையாடின. பேட்டிங் செய்த என்.ஐ.ஏ., அணி, 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 210 ரன்கள் எடுத்தது. விஜயகுமார், 93 ரன்கள் விளாசினார். எதிரணி வீரர் இசக்கி மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.
கொங்கு கிரிக்கெட் கிளப் அணி, 37.1 ஓவரில் ஐந்து விக்கெட்டுக்கு, 212 ரன்கள் எடுத்தது. வீரர் டெரின் ஜெரால்டு, 53 ரன்களும், செந்தில், 36 ரன்களும், சரத், 31 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர் அசோக்குமார் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார். தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.
மேலும்
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: மும்பை அணிக்கு 204 ரன்கள் இலக்கு
-
டிரம்ப் வரி விதிப்பால் கோடிகளை இழந்த கோடீஸ்வரர்கள்
-
ஆடிட்டரிடம் ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்: போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
-
முட்டை கேட்ட பள்ளிச் சிறுவன் மீது துடைப்பத்தால் தாக்குதல்; சத்துணவு பணியாளர்கள் கைது
-
பார்லி நிலைக்குழு அறிவுறுத்தலை கேட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்குமா: கேட்கிறார் சிதம்பரம்
-
சக அதிகாரியிடம் 30,000 ரூபாய் லஞ்சம்: முத்திரை ஆய்வாளர் கைது!