உயர்கல்வி வழிகாட்டுதல் 5ம் தேதி ஆலோசனை முகாம்

கடலுார்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் வரும் 5ம் தேதி சிதம்பரத்தில் நடக்கிறது.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் செய்திக்குறிப்பு:

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வெழுதிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, உயர்கல்வி வழிகாட்டு முகாம் நடத்தப்படுகிறது. 'என் கல்லுாரி கனவு' என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் 5ம் தேதி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கூட்டரங்கில் நடக்கிறது.

Advertisement