காயம் அடைந்த பாகிஸ்தான் மீனவருக்கு உதவிய இந்திய கடற்படை; நெகிழ்ச்சி சம்பவம்!

மும்பை: ஓமனுக்கு அருகே காயம் அடைந்த பாகிஸ்தான் மீனவர் ஒருவருக்கு இந்திய கடற்படையினர் அவரச மருத்துவ உதவியை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓமன் கடற்கரைக்கு கிழக்கே சுமார் 350 கடல் மைல் தொலைவில் ஈரானிய படகு ஒன்று பாதிப்பில் உள்ளதாக தகவல் கிடைத்தது. படகின் குழுவினர் இயந்திரத்தில் வேலை செய்தபோது ஒருவருக்கு விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ஈரானுக்கு செல்லும் வழியில் அவர் மற்றொரு படகுக்கு மாற்றப்பட்டார்.
இந்த தகவல் இந்திய கடற்படையினருக்கு கிடைத்தது. இதையடுத்து, ஐ.என்.எஸ்., திரிகண்ட் போர்க் கப்பலில் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஈரான் மீன்பிடி படகில் 11 பாகிஸ்தானியர்கள், 5 ஈரானியர்கள் இருந்தனர். காயமடைந்த நபர் பாகிஸ்தானை (பலூச்) சேர்ந்தவர். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது.
திரிகண்ட் கப்பலில் இருந்த மருத்துவ அதிகாரி மார்கோஸ், காயம் அடைந்த பாகிஸ்தான் மீனவருக்கு சிகிச்சை அளித்தார். மயக்க ஊசி செலுத்தி தையல் போட்டார். இந்த சிகிச்சை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
ஈரானை அடையும் வரை அவருக்கு தேவையான மருத்துவ பொருட்களும் வழங்கப்பட்டன. சரியான நேரத்தில் மருத்துவ உதவிகளை வழங்கியதற்காக படகில் இருந்த குழுவினர் இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'நம் பிரச்னைகளுக்கு நம்மிடமே தீர்வு'; ஏ.ஐ., ஆய்வில் சென்னை ஐ.ஐ.டி., வெற்றி
-
குன்னுார் வெலிங்டன் வந்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
-
உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகள் சென்னையில் காத்திருப்பு போராட்டம்
-
ஜோய் ஆலுக்காஸ் கிருஷ்ண லீலா கலெக் ஷன்
-
நடிகர் சயிப் வழக்கு குற்றப்பத்திரிகை 'லேட்'
-
அமைச்சர் பேத்தி சுட்டுக்கொலை
Advertisement
Advertisement