நான்கு பேரிடம் ரூ.25 ஆயிரம்  சைபர் கிரைம் கும்பல் மோசடி

புதுச்சேரி: புதுச்சேரியில் 4 பேரிடம், 25 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி சண்முகாபுரத்தை சேர்ந்தவர் சிவபெரு மாள். இவரை தொடர்பு கொண்ட நபர், கார் கம்பெனியில் இருந்து பேசுவதாக முதலில் அறிமுகம் செய்தார். கம்பெனியில், வேலை வேண்டுமானால், முதலில் டெபாசிட் செலுத்த வேண்டும் என கூறினார்.

அதை நம்பி, அவர் 22 ஆயிரம் பணத்தை அனுப்பினார். பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாததால், மோசடி கும்பல் என தெரியவந்தது.

மேலும் ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த ஜோதிகா, ஆயிரத்து 600, சாரம் பகுதியை சேர்ந்த சுவர்ண லட்சுமி, ஆயிரம் ரூபாய், வில்லியனுாரை சேர்ந்த அப்துல், ஆயிரம் ரூபாய் அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர்.

இது குறித்து, 4 பேரும் தனித்தனியே கொடுத்து புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம கும்பலை தேடிவருகின்றனர்.

Advertisement