பாகூரில் புதிய போர்வெல் எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு

பாகூர்: குருவிநத்தம் கிராமத்தில் புதிய போர்வெல்களை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.
பாகூர் கொம்யூன், கடற்கரை கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இப்பிரச்னையை, சரி செய்யும் வகையில், புதுச்சேரி பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் சார்பில், ஒரு கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில், பாகூர் பகுதியில் 9 இடங்களில் ஆழ்துளை கிணறு மற்றும் அதனை சார்ந்த பணிகளான மின் மோட்டார் பொறுத்துதல், குடிநீர் குழாய் இணைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்டமாக, குருவிநத்தம், பாகூர் கூட்டுறவு நகர், பாகூர் காமராஜர் நகரில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்களை இயக்கிவைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
செந்தில்குமார் எம்.எல்.ஏ., போர்வெல்களை இயக்கி வைத்தார். உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர்கள் சிவானந்தம், கோபாலக்கிருஷ்ணன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், உதவி பொறியாளர் சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.