பைக்குகள் திருடிய வாலிபர் கைது

அரியாங்குப்பம்: பல்வேறு இடங்களில் பைக்குகள் திருடிய, வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முதலியார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் வில்லியனுார் ரோடு கொம்பாக்கம் அருகே நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் பைக்கை நிறுத்தி விட்டு தப்பியோட முயற்சி செய்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர் சிதம்பரம் அடுத்த குமராட்சியை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் சங்கர், 24; என்பதும், அவர் ஓட்டி வந்த பைக், முதலியார்பேட்டை நுாறடி சாலையில் உள்ள பைக் சர்வீஸ் சென்டரில் இருந்து திருடியதும், மேலும், அவர் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பைக் திருடி வந்த போது, போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது.

போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். திருடிய பைக்கை பறிமுதல் செய்தனர்.

Advertisement