தொழிற் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தொழிற் பயிற்சிபெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (விழுப்புரம்) அலுவலக செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) மற்றும் தொழில் பழகுநர் பயிற்சி மையம் (தென் மண்டலம்) இணைந்து இணையதளம் மூலம் தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கடந்த 2021, 22, 23, 24ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடம் இருந்து ஓராண்டு தொழிற் பயிற்சிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம், கடலுார், வேலுார், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை) தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேலும் விபரங்கள் பெற http://nats.education.gov.in என்ற இணையதளத்தை காண வேண்டும். இந்த இணையதளம் மூலம் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.