முன்விரோத தகராறு 14 பேர் மீது வழக்கு

செஞ்சி: முன்விரோதத்தில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய 14 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

செஞ்சி அடுத்த பெருங்காப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேசிங்கு, 45; அதே ஊரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, 49; இருவருக்குமிடையே முன்விரோதம் உள்ளது.

இதன் காரணமாக கடந்த 2ம் தேதி மாலை 7:00 மணிக்கு அண்ணாதுரை மற்றும் அவரது உறவினர்கள் 13 பேர் சேர்ந்து தேசிங்கு வீட்டிற்குள் புகுந்து தேசிங்கு அவரது மனைவி சுமதி ஆகியோரை தாக்கி வீட்டில், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் அண்ணாதுரை, அவரது உறவினர்கள் செல்வி, 45; சித்ரா, 46; உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement