காரைக்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு

காரைக்குடி அருகே சூரக்குடி ரோட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு தினமும் 300க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
இது தவிர இங்கு ரூ.10.50 கோடியில் மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவு கட்டடம் கட்டியதால், மகப்பேறு சிகிச்சைக்காக ஏராளமான கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு மாதத்திற்கு 300 முதல் 400 பிரசவம் வரை நடக்கிறது. சிவகங்கை மட்டுமின்றி அருகில் உள்ள புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட கர்ப்பிணிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இங்கு உள், வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 24 டாக்டர்கள் வரை பணிபுரிய வேண்டும். ஆனால், 15க்கும் குறைவான டாக்டர்கள் தான் உள்ளனர்.
காதுமூக்கு தொண்டை, கண் மருத்துவத்திற்கு உரிய உபகரணங்கள் இருந்தும், டாக்டர்களின்றி உபகரணங்கள் காட்சி பொருளாக உள்ளன. இங்கு லேப் டெக்னீசியன், ரேடியோலாஜிஸ்ட் பணியிடம் பல ஆண்டாக காலியாகவே உள்ளன.
இதற்காக வெளியில் இருந்து தான் டாக்டர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக காரைக்குடி ரயில்வே பீடர் ரோட்டில் இருந்த பழைய மருத்துவமனையில் இருந்து உபகரணங்களை புதிய மருத்துவமனைக்கு மாற்றினர். இங்கு புறநோயாளிகள் பிரிவு மட்டுமே செயல்படுகிறது.
கூடுதல் சிகிச்சைக்கு புதிய மருத்துவமனைக்கு வருமாறு நோயாளிகளை அலைக்கழிக்கின்றனர். இதனால், ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கிராமங்களில் இருந்து வருவோர், அலைய முடியாமல் தவிப்பிற்கு உள்ளாகின்றனர்.
பெயரளவில் மாவட்ட மருத்துவமனை
இது குறித்து காரைக்குடி ஆதிஜெகநாதன் கூறியதாவது, மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை போன்று தான் செயல்படுகிறது.
டாக்டர்கள், டெக்னீசியன் பணியிடங்கள் காலியாக உள்ளன. பச்சிளம் குழந்தை பிரிவுக்கு குறைந்த டாக்டர்களே இருப்பதால், பிறந்த சில மாதங்களில் பிரச்னையுடன் வரும் குழந்தைகளுக்கு சிகிச்சை கிடைப் பதில்லை.
ஏராளமான நர்சுகள் பணியிடமும் காலியாக தான் உள்ளது. பெயரளவிற்கு மட்டுமே மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்படுகிறது. இதை அரசு கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசிடம் கோரிக்கை
காரைக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அருள்தாஸ் கூறியதாவது, நீண்ட நாளாக ரேடியாலஜிஸ்ட் பணியிடம் காலியாக தான் இருந்தது.
தற்போது தான் அதற்கு டாக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். டெக்னீசியன், டாக்டர், பிற சிறப்பு பிரிவு டாக்டர்கள் காலிபணியிடத்தை நிரப்ப வேண்டும் என அரசுக்கு எழுதியுள்ளோம், என்றார்.
மேலும்
-
வக்ப் சட்டத்திருத்த விவாதத்தில் ராகுல், பிரியங்கா மவுனம்; கேரள முஸ்லிம் அமைப்பு கண்டனம்
-
அமெரிக்காவில் இருந்து 682 இந்தியர்கள் நாடு கடத்தல்: மத்திய அரசு தகவல்
-
கனடாவில் கிருஷ்ணர் கோவிலை சேதப்படுத்திய இருவருக்கு போலீசார் வலை
-
சவுரப் சவுத்ரி ஏமாற்றம்: உலக துப்பாக்கி சுடுதலில்
-
இங்கிலாந்து வீரர் விலகல்
-
வக்ப் சட்டத்திருத்தம்: நீண்ட நேரம் செயல்பட்ட பார்லி., !