டிராக்டர் கிணற்றில் விழுந்ததில் பெண்கள் 8 பேர் பலி; மஹா.,வில் பரிதாபம்

2


மும்பை: மஹாராஷ்டிராவில் டிராக்டர் கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பெண்கள் 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மஹாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் தொழிலாளர்களை ஏற்றி சென்ற டிராக்டர் கிணற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரம் போராடி பெண்கள் இரண்டு பேர் மற்றும் ஆண் ஒருவரை மீட்டனர். ஆனாலும், பெண்கள் 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



விசாரணையில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. தொழிலாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் தோட்டத்து வேலைக்காக டிராக்டரில் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement