நிறைவு பெற்றது பட்ஜெட் கூட்டத்தொடர்: பார்லி., காலவரையின்றி ஒத்திவைப்பு

புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. பார்லி., காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு கடந்த ஜன.,31 முதல் பிப்.,13 வரை நடந்தது. பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 10ம் தேதி துவங்கியது.
கூட்டத்தொடர் துவங்கி முதல் நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதா லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. பார்லி., காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபாவை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


மேலும்
-
வரலாற்றில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
-
லாரி கவிழ்ந்து கோர விபத்து; தந்தை மகன், மகள் உயிரிழப்பு
-
ரூ.63 கோடி முறைகேடு; கர்நாடகாவில் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் கைது
-
உலகின் சிறந்த 'டாப்' 100 விமான நிலையங்கள் பட்டியல் இதோ; 4 இந்திய விமான நிலையங்கள் சாதனை!
-
அமெரிக்கா - சீனா இடையே வரி விதிப்பு போர்; ரஷ்யா கிண்டல்
-
மாதவிடாய்; வகுப்பறை வாசலில் தேர்வு எழுதிய மாணவி; விசாரணைக்கு உத்தரவு