கவலை அளிக்கிறது!

1

பங்குச்சந்தை முதலீட்டாளர்கள், 19 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர். எல்.பி.ஜி., சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. உ.பி.,யின் வாரணாசியில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். நாட்டின் நிலைமை கவலை அளிக்கிறது.

அகிலேஷ் யாதவ்

தலைவர், சமாஜ்வாதி

அவமதித்து விட்டார்!



'அரசியலமைப்பு சட்டம், 1947-ல் எழுதப்படவில்லை. இந்த சட்டம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது' என, ராகுல் பேசியுள்ளார். இந்த கருத்து அரசியலமைப்பு பற்றிய அவரின் அறியாமையை காட்டுகிறது. மேலும், இது அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் அம்பேத்கரை அவமதிப்பதாகும்.

அர்ஜுன் ராம் மேக்வால்

மத்திய அமைச்சர்,


பா.ஜ.,

மாவட்ட அளவில் சீர்திருத்தம்!



காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் நோக்கம், அதிகாரம் மிக்க மாவட்ட பிரிவுகளை உருவாக்குவதாக உள்ளது. இதன் வாயிலாக வரவிருக்கும் தேர்தல்களை காங்., வலிமையுடன் எதிர்கொள்ளும்.

சச்சின் பைலட்

பொதுச் செயலர்,

காங்கிரஸ்

Advertisement