தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,480 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 11) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.69,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,160 உயர்ந்துள்ளது.
சர்வதேச நிலவரங்களால் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை, தமிழகத்தில் கடந்த வாரத்தில் சற்று குறைந்தது. தற்போது மீண்டும் தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது. நேற்று முன்தினம் (ஏப்ரல் 09) காலை தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து, 66,320 ரூபாய்க்கு விற்பனையானது.
மதியம் திடீரென சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, 67,280 ரூபாய்க்கு விற்பனையானது.நேற்று (ஏப்ரல் 10) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.68,400க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 11) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.69,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.185 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,745க்கு விற்பனை ஆகிறது. 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து (6)
R S BALA - CHENNAI,இந்தியா
11 ஏப்,2025 - 19:12 Report Abuse

0
0
Reply
RAJ - dammam,இந்தியா
11 ஏப்,2025 - 18:33 Report Abuse

0
0
Reply
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
11 ஏப்,2025 - 10:19 Report Abuse

0
0
Reply
Thetamilan - CHennai,இந்தியா
11 ஏப்,2025 - 09:56 Report Abuse

0
0
Rajan A - ,இந்தியா
11 ஏப்,2025 - 14:42Report Abuse

0
0
Reply
அப்பாவி - ,
11 ஏப்,2025 - 09:53 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பாதுகாப்புத்துறையில் ரூ.50 ஆயிரம் கோடி ஏற்றுமதிக்கு இலக்கு: ராஜ்நாத் சிங்
-
மருதமலை முருகன் கோவிலுக்கு வாகனங்களில் செல்ல புதிய கட்டுப்பாடு: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
-
மத்திய அரசு செயலாளர்கள் மாற்றம்: வருவாய்த்துறை செயலராக அர்விந்த் ஸ்ரீவஸ்தவா நியமனம்
-
நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகள்: அமலாக்கத்துறை முடக்கம்
-
திருமணம் அன்றே குழந்தை பிறந்தால் வேறு விதமாக தான் இருக்கும்: தி.மு.க., எம்.பி., கல்யாணசுந்தரம் பேச்சு
-
வேடசந்தூர் அருகே லாரி - கார் மோதல்: 3 பேர் பலி
Advertisement
Advertisement