பிரீமியர் லீக் கிரிக்கெட்: லக்னோ அணி வெற்றி

லக்னோ: பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் மும்பை அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வீழ்த்தியது.



18 வது பிரீமியர் லீக் லீக் கிரிக்கெட் போட்டி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. இதில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணிக்கு மிச்சல் மார்ஸ்(60), அயிடன் மார்க்ரம்(53) சிறப்பான துவக்கம் தந்தனர்.
ஆனால், நிக்கோலஸ் பூரன் 12 , கேப்டன் பன்ட் 2, அப்துல் சமத் 4, ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர்.
பதோனி 30, டேவிட் மில்லர் 27 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியில் வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனையடுத்து லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்து உள்ளது. மும்பை அணி கேப்டன் பாண்டியா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.


204 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி நிதானமாக ஆட்டத்தை துவக்கியது, வில்ஜாக் 4 ரன்களிலும், ரேயான் நிகல்டான் 10 ரன்களிலும், நமான் தஹிர் 46 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சூரியகுமார் யாதவ் 67 ரன்களிலும் திலக் வர்மா 25 ரன்களில்ஆட்டமிழந்தனர்.

ஹர்திக் பாண்டியா 28 ரன்களும் . , மிட்சல் சாட்னர் 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து. இதையடுத்து லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement