பா.ஜ., ஸ்தாபன தினம் கொண்டாட ஏற்பாடுகள்

திருப்பூர்; பா.ஜ., கட்சி தோற்றுவிக்கப்பட்ட ஸ்தாபன தினத்தை (ஏப்., 6) முன்னிட்டு, ஆறு நாட்கள் பிரம்மாண்டமாக கொண்டாடுவது குறித்து, நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டம் பா.ஜ., திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நேற்று நடந்தது.

முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், 6ல் துவங்கி 12ம் தேதி வரை அன்றாடம் நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு, வீடுகள் தோறும் கொடிகள், ஊர்வலங்கள், கூட்டங்கள், துாய்மை பணிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை பா.ஜ., வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

Advertisement