போதை மாத்திரைகளை கடத்திய 4 வாலிபர்கள் கைது
கோவை ; போதை மாத்திரைகளை கடத்தி வந்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
கோவையில் போதைப்பொருட்களை ஒழிக்க மாநகர மற்றும் மாவட்ட போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து கோவைக்கு கடத்தி வருவதை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். ரயில், கூரியர் மூலம் போதைப்பொருட்களை கடத்தி வருவர்களை கண்காணித்து கைது செய்கின்றனர். மேலும், முன்னாள் குற்றவாளிகளை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் குற்றவாளிகளான கிஷோர், சூர்யா, தினேஷ் ஆகியோரின் மொபைல் எண்களை போலீசார் 'டிராக்' செய்து பார்த்த போது அவர்கள் அகமதாபாத் சென்று ரயிலில் திரும்பி வந்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரயில்வே ஸ்டேஷனில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ரயிலில் இருந்து இறங்கி வந்த புலியகுளத்தை சேர்ந்த கிஷோர், 27, அவரது தம்பி தினேஷ், 25, ரத்தினபுரியை சேர்ந்த சூர்யா, 19 மற்றும் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த அஜய் பெலிக்ஸ், 25 ஆகியோரிடம் சோதனை செய்தனர். அவர்களிடம், போதைக்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரைகள் 1556 இருந்தது.
இதையடுத்து, நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தெரிவிக்கையில், '' கிஷோர், தினேஷ் ஏற்கனவே போதைப்பொருட்கள் விற்பனை செய்து, கைதாகி சிறை சென்றவர்கள். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளிவந்துள்ளனர். மீண்டும் வெளியூர்களுக்கு சென்று மாத்திரைகள் வாங்கி வந்து இங்கு கல்லுாரி மாணவர்கள், வாலிபர்கள், ஐ.டி., ஊழியர்கள் என பல தரப்பினருக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். அவர்களின் மொபைல் போனை டிராக் செய்த போது அவர்கள் வெளி மாநிலத்திற்கு சென்று திரும்பி வருவது தெரியவந்தது. அதன் அடிப்படையில் சோதனை மேற்கொண்டு கைது செய்துள்ளோம்,'' என்றார்.
மேலும்
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: மும்பை அணிக்கு 204 ரன்கள் இலக்கு
-
டிரம்ப் வரி விதிப்பால் கோடிகளை இழந்த கோடீஸ்வரர்கள்
-
ஆடிட்டரிடம் ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்: போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
-
முட்டை கேட்ட பள்ளிச் சிறுவன் மீது துடைப்பத்தால் தாக்குதல்; சத்துணவு பணியாளர்கள் கைது
-
பார்லி நிலைக்குழு அறிவுறுத்தலை கேட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்குமா: கேட்கிறார் சிதம்பரம்
-
சக அதிகாரியிடம் 30,000 ரூபாய் லஞ்சம்: முத்திரை ஆய்வாளர் கைது!