கோப்புகளை நான்தான் முதலில் பார்ப்பேன்: மஹா.,வில் ஷிண்டேவுக்கு ‛முதல் மரியாதை'

மும்பை : 'மாநில அரசின் அனைத்து கோப்புகளும், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பார்வைக்கு அனுப்பப்பட்டு, அதன் பிறகே முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும்' என, மஹாராஷ்டிர அரசு உத்தரவிட்டு உள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்.,கின் அஜித் பவார் துணை முதல்வர்களாக உள்ளனர்.
இந்நிலையில், மஹாராஷ்டிர மாநில தலைமை செயலர் சுஜாதா சவுனிக் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், 'அரசு சம்பந்தப்பட்ட கோப்புகள் அனைத்தும் துணை முதல்வர்கள் அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்ட பின், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.
மஹாராஷ்டிராவில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சியின் போது, அக்கட்சியின் 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்ளுடன் பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே, பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு அளித்தார். இதை தொடர்ந்து அவர் முதல்வரானார்.
அதன்பின், 2023, ஜூலையில் தேசியவாத காங்., எம்.எல்.ஏ.,க்களுடன் கட்சியைவிட்டு வெளியேறிய அஜித் பவார், பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு அளித்தார். அவருக்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டது.
பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிசும் துணை முதல்வராக இருந்தார். இந்த காலகட்டத்தில், அரசு சம்பந்தப்பட்ட அனைத்து கோப்புகளும் துணை முதல்வர்கள் பட்னவிஸ், பவார் பார்வைக்கு சென்ற பிறகே, முதல்வர் ஷிண்டே ஒப்புதலுக்கு அனுப்பும் நடைமுறை துவங்கியது.
கடந்த 2024 சட்டசபை தேர்தலில் பா.ஜ., அதிக இடங்களில் வென்றதை தொடர்ந்து பட்னவிஸ் கை ஓங்கியது. அவர் முதல்வரானார். ஷிண்டேவும், பவாரும் துணை முதல்வராயினர்.
மஹாயுதி கூட்டணி இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்தபின், அரசு கோப்புகளை துணை முதல்வர்கள் பார்வைக்கு அனுப்பும் நடைமுறை நிறுத்தப்பட்டது. இதனால் ஷிண்டே அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், பல்வேறு விவகாரங்களில் பட்னவிஸ் - ஷிண்டே இடையே உரசல்கள் துவங்கின.
இந்நிலையில், துணை முதல்வர்களை சமாதானம் செய்யும் விதமாக, அரசு கோப்புகள் அனைத்தும் அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே பார்வைக்கு அனுப்பப்பட்ட பின், முதல்வர் பட்னவிஸ் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்ற பழைய நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்துஉள்ளது.
வாசகர் கருத்து (4)
M R Radha - Bangalorw,இந்தியா
04 ஏப்,2025 - 09:02 Report Abuse

0
0
Reply
Raj - Chennai,இந்தியா
04 ஏப்,2025 - 05:54 Report Abuse

0
0
Indian - kailasapuram,இந்தியா
04 ஏப்,2025 - 08:50Report Abuse

0
0
வெள்ளைச்சாமி,அறந்தாங்கி - ,
04 ஏப்,2025 - 09:17Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement