ரூ.63 கோடி முறைகேடு; கர்நாடகாவில் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் கைது

1

பெங்களூரு: கர்நாடகாவில் ரூ.63 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

பெங்களூரு மற்றும் சிவமோகா மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தக் கிளைகளில் பெரிய அளவிலான ரொக்கம் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது.

சிவமோகா மாவட்ட கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் மஞ்சுநாதா கவுடா என்பவரின் அறிவுறுத்தலின் பேரில், கிளை மேலாளர் ஷோபனா இந்த முறைகேட்டில் ஈடுபட்டது அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதாவது, மோசடி ஆவணங்களை வைத்து போலி நகைக் கடன் கணக்குகளை உருவாக்கி சுமார் ரூ.63 கோடி வரை மேலாளர் ஷோபனா மோசடியில் ஈடுபட்டுளளார். மோசடி செய்த பணத்தில் கவுடாவுக்கும் பங்கு கொடுத்துள்ளார். இதனை வைத்து சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். இது தொடர்பாக லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் மஞ்சுநாதா கவுடாவை கைது செய்த அமலாக்கத்துறை, அவரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, 14 நாட்கள் அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

Advertisement